சினிமா
ரொம்ப நாளைக்குப் பிறகு… நாகார்ஜுனா – தபு மீண்டும் சேர்றாங்க…வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.!
ரொம்ப நாளைக்குப் பிறகு… நாகார்ஜுனா – தபு மீண்டும் சேர்றாங்க…வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.!
27 ஆண்டுகளுக்குப் பிறகு, தெலுங்கு சினிமாவின் ‘கிங்’ என அழைக்கப்படும் புதிய படத்தில் நாகார்ஜுனா மற்றும் நடிகை தபு, மீண்டும் ஒரு முறை இணைந்து நடிக்கவிருக்கின்றனர்.இந்தப் படம், நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படமாக அமையவுள்ளது என்பதாலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்திற்கு தற்போது ‘KING 100’ என்ற பெயர் இடப்பட்டு, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.1996-ம் ஆண்டு வெளிவந்த ‘நின்னே பெல்லடுதா’ திரைப்படம், நாகார்ஜுனா மற்றும் தபுவை ஒரு கனவு ஜோடியாக மாற்றியது. அந்த நேரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த காதல் திரைப்படம், இன்றும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது.இந்நிலையில் தற்பொழுது உருவாகிவரும் இந்த புதிய திரைப்படம், நாகார்ஜுனாவின் திரைப்பயணத்தில் 100-வது படம் என்ற அடையாளத்தை தரவிருப்பதால், இது அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
