இலங்கை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பட்டையை கிளப்பிய தமிழ் இளைஞன் ; வைரலாகும் வீடியோ
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பட்டையை கிளப்பிய தமிழ் இளைஞன் ; வைரலாகும் வீடியோ
அமெரிக்காவின் நியூயார்க் நகரம் ஐக்கிய அமெரிக்காவில் மிகக்கூடுதலான மக்கள் தொகையுடைய நகரமாகும்.
இந்நகரத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் தமிழர்களின் அடையாளமான பறை இசைத்து பல வெளிநாட்டவர்களை நடனமாட வைக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குறித்த காணொளியில், அதிக மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகின்ற வீதியொன்றில் இளைஞர் ஒருவர் பறை வாத்தியத்தை சிறப்பான முறையில் இசைப்பதை காணமுடிகின்றது.
குறித்த இளைஞர் பறை வாசிக்க தொடங்கிய சில நொடிகளிலேயே சுற்றி இருந்த மக்கள் அனைவரும் பறை இசைக்கேற்ப ஆடி மகிழ்வதையும் பலர் அதனை காணொளியாக பதிவு செய்வதனையும் காணமுடிகின்றது.
குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
