இலங்கை
தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள்!
தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள்!
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குள் நுழைந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறினார்.
எதிர்க்கட்சியில் இருக்கும்போது இதுபோன்ற தியாகங்கள் அரிதானவை என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறினார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
