சினிமா
வெற்றி தானாக வரவில்லை… அதற்காக எவ்வளவு இழந்தேன் தெரியுமா.? இயக்குநர் பிரதீப்பின் பதிவு.!
வெற்றி தானாக வரவில்லை… அதற்காக எவ்வளவு இழந்தேன் தெரியுமா.? இயக்குநர் பிரதீப்பின் பதிவு.!
பிரதீப் ரங்கநாதன் ஒரு சாதாரண பையனாக தனது வாழ்க்கையைத் தொடங்கி தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநராக உயர்ந்த பயணம், இளைஞர்களுக்கு மிகப்பெரிய பாடமாக உள்ளது. சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன், தனது IT வேலையை ராஜினாமா செய்த அவருக்கு, இதை பற்றி வீட்டில் சொல்லும் தைரியம் கூட இல்லை.இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட பிரதீப் ரங்கநாதன், “நான் IT வேலையை விட்டு விட்டதை அப்பா அறியவில்லை. அவர் நினைத்தது நான் வேலை செய்துகொண்டே படம் பண்ணுறேன் என்று தான். ஆனால் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “கோமாளி” பட ரிலீஸுக்குப் பிறகு தான் அவருக்கு உண்மை தெரியவந்தது. இன்று வெற்றி பெற்ற டைரக்டர் ஆனாலும் அப்பா இன்னும் Xerox கடையைத் தான் நடத்துகிறார்.,” என உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.இன்று பல கோடி ரசிகர்களை கவர்ந்த இயக்குநராக இருந்தாலும், அவரது குடும்பம் எளிமை வாழ்க்கையைத் தான் தொடர்கிறது என்பதனை இதன் மூலம் அறியமுடிகிறது. இந்த வார்த்தைகள், வெற்றியை எளிமையுடனும், பண்புடன் எதிர்கொள்வது எப்படி என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
