இலங்கை
சீனாவில் தடைசெய்யப்பட்ட நகரத்தை பார்வையிட்ட பிரதமர் ஹரிணி
சீனாவில் தடைசெய்யப்பட்ட நகரத்தை பார்வையிட்ட பிரதமர் ஹரிணி
சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள், அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் கலைத்துவ பெருமை மிக்க யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளங்களான தடைசெய்யப்பட்ட நகரத்தையும் (அரண்மனை அருங்காட்சியகம்) சீனப் பெருஞ்சுவரையும் பார்வையிட்டார்.
இப்பயணத்தில் பிரதமருடன் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங் (Qi Zhenhong) மற்றும் சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் மஞ்சித ஜயசிங்க ஆகியோர் உடன் சென்றனர்.
