சினிமா
விஜய் சேதுபதி கொடுத்த பவர்.? வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் களமிறங்கிய ஆயிஷா..
விஜய் சேதுபதி கொடுத்த பவர்.? வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் களமிறங்கிய ஆயிஷா..
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது தமிழ் பிக்பாஸ் டல் அடிப்பதாக ரசிகர்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 9 தமிழ் மற்றும் தெலுங்கில் ஆரம்பமாகி விமர்சையாக ஒளிபரப்பாகி வருகின்றன. தமிழ் பிக்பாஸ் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தெலுங்கு பிக்பாஸ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிலையில், தெலுங்கு பிக்பாஸில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சீரியல் மற்றும் சினிமா நடிகை ஆயிஷா களமிறங்கி உள்ளார். அவருக்கு சிறப்பு பவர் ஒன்றும் விஜய் சேதுபதியால் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. அதாவது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 9ல் தற்போது வைல்ட் கார்ட் மூலம் போட்டியாளர்களை வீட்டிற்குள் அனுப்பும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. அதில் களம் இறங்குவதற்கு ஆயிஷாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் அவர் வைல்ட் கார்ட் போட்டியாளராக களம் இறங்கியுள்ளார். இவ்வாறான நிலையிலே பிக்பாஸ் சீசன் 9ஐ தமிழில் தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி அவருக்கு Power Of Nomination என்ற பவரைக் கொடுத்து வாழ்த்து சொல்லி அனுப்பி உள்ளாராம். தற்போது இது தொடர்பான தகவல்கள், வீடியோக்கள் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் ஆயிஷாவுக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
