உலகம்
காஸாவில் போர்நிறுத்தம்: இறுதி உச்சிமாநாடு இன்றும்; ட்ரம்ப் பங்கேற்கின்றார்!
காஸாவில் போர்நிறுத்தம்: இறுதி உச்சிமாநாடு இன்றும்; ட்ரம்ப் பங்கேற்கின்றார்!
காஸாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எகிப்திய அதிபர் அல் சிசி ஆகியோரின் தலைமையில் இன்று உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.
காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு ஹமாஸ் அமைப்பும். இஸ்ரேலும் இணக்கம் தெரிவித்துள்ளன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த ஒரு வாரகாலமாக இடம்பெற்ற நிலையில், இதன் இறுதிக்கட்ட மாநாடு எகிப்தில் இன்று நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டிலேயே, அதிபர் ட்ரம்ப் கலந்து கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. ட்ரம்பைத் தவிர, மேலும் பல உலகத் தலைவர்களும் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் குட்டரஸ், பிரிட்டனின் பிரதமர் ஸ்டார்மர். இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி. ஸ்பெயினின் சான்சிலர் பெட்ரோ சான்செஸ், பிரான்ஸின் அதிபர் மக்ரோன் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு, மாநாட்டில் கலந்துகொள்வாரா இல்லையா என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், ஹமாஸ் அமைப்பு பங்கேற்காது எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
