இலங்கை
ரயிலுடன் மோதுண்டு ஓட்டோ சாரதி பலி; கிளிநொச்சியில் சோகம்!
ரயிலுடன் மோதுண்டு ஓட்டோ சாரதி பலி; கிளிநொச்சியில் சோகம்!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப்பயணித்துக் கொண்டிருந்த யாழ் தேவி ரயிலும், ஓட்டோவொன்றும் விபத்துக்கு உள்ளானதில் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்தார். கிளாலியைச் சேர்ந்த நவனீதராசா (வயது-50) என்ற நபரே உயிரிழந்தவராவார்.
கிளிநொச்சி பளை இத்தாவில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேம்பொடுகேணியில் பயணிகளை இறக்கி விட்டுத் திரும்பும்போதே, ஓட்டோ விபத்தில் சிக்கியதாக நம்பப்படுகின்றது. விபத்தில் ஓட்டோவின் முன்பக்கம் ரயிலால் தகர்க்கப்பட்ட நிலையில், ஓட்டோவின் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்ற கிளிநொச்சிப் பொலிஸார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். அத்துடன் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
