இலங்கை
அநுரகுமார ஆட்சியில் மலையகத்துக்கு விடிவு; பெருந்தோட்ட அமைச்சர் நம்பிக்கை
அநுரகுமார ஆட்சியில் மலையகத்துக்கு விடிவு; பெருந்தோட்ட அமைச்சர் நம்பிக்கை
200 ஆண்டுகளாக வசிப்பதற்குக்கூட வீடில்லாது ஏமாற்றப்பட்ட மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மிளிரச்செய்வதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று பெருந்தோட்ட, சமூக உட்கட்ட மைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.
பண்டாரவளையில் இந்திய வீட்டுத்திட்டத்தின் வீட்டுறுதிக்கான ஆவணத்தை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களால் நாட்டுக்கு வருடாந்தம் சுமார் 2பில்லியன் டொலருக்கும் அதிக அந்நியச் செலாவணி வருமானம் கிடைக்கின்றது. ஆனால் அந்த மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படுவதில்லை. அந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டத்தை எமது அரசாங்கம் செயற்படுத்தி வருகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
