இலங்கை
மருத்துவமனைகள் நிரம்ப வீதி விபத்துகளே காரணம்; அமைச்சர் நளிந்த சுட்டிக்காட்டு
மருத்துவமனைகள் நிரம்ப வீதி விபத்துகளே காரணம்; அமைச்சர் நளிந்த சுட்டிக்காட்டு
நாட்டில் அதிகளவானோர் திடீர் விபத்துகள் காரணமாகவே மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகின்றனர். இது தொடர்பில் பொதுவிழிப்புணர்வு அவசியம் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரி வித்துள்ளதாவது:
விபத்துகள் தடுக்கக்கூடியவை, தவிர்க்கக்கூடியவை. ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியுடன் முன்னேறிச்செல்லும் போது, விபத்துகளைத் தடுப்பதற்கான தலையீடுகள் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு அம்சத்திலும் செய்யப்பட வேண்டும். பொதுமக்களுக்கு அறிவுறுத்தி, சுகாதார ஊழியர்களை அதில் இணைத்து தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி, திடீர் விபத்துகளால் மருத்துவ அமைப்பில் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கவேண்டும் – என்றார்.
