இலங்கை
இலங்கையில் எகிறும் தேசிக்காய் விலை!
இலங்கையில் எகிறும் தேசிக்காய் விலை!
நாட்டின் பல பகுதிகளில் ஒரு கிலோ தேசிக்காயின் சில்லறை விலை 3,000 ரூபாயாக அதிகரித்துள்ளதால், ஒரு தேசிக்காய் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
தம்புள்ளை, கெப்பட்டிபொல போன்ற பொருளாதார மையங்களில், ஒரு கிலோ தேசிக்காயின் மொத்த விலை 1,900 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இந்த நாட்களில் தேசிக்காயின் பற்றாக்குறை காரணமாக அவற்றின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
