இலங்கை
சட்டவிரோதமாக மணல் ஏற்றிய ஹன்ரர் பறிமுதல்
சட்டவிரோதமாக மணல் ஏற்றிய ஹன்ரர் பறிமுதல்
அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிக்கொண்டிருந்த சிறியரக ஹன்ரர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்றுக் கைப்பற்றப்பட்டது.
சட்டவிரோதமாக மணல் கடத்தல் இடம்பெறுகின்றது என யாழ்ப்பாண பிரதான பொலிஸ் பரிசோதகர் பாலித்த செனவிரட்னவுக்குத் தகவல் கிடைத்தது. அதனையடுத்து அவரது பணிப்புரைக்கு அமைவாக குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் இலக்கத்தகடற்று மணல் ஏற்றிக்கொண்டிருந்த வாகனத்தைக் கைப்பற்றினர். சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
