இலங்கை
சீர்திருத்தங்கள் செய்யாதுவிடின் இலங்கை வறுமையில் சிக்கும்!
சீர்திருத்தங்கள் செய்யாதுவிடின் இலங்கை வறுமையில் சிக்கும்!
வறுமைப் பகுப்பாய்வு மையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டு
துணிச்சலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால், உலகளாவிய நிலையற்ற காரணிகளின் அடிப்படையில், இலங்கையில் ஏற்கனவே உயர்ந்த வறுமை நிலைகள் மேலும் உயரக்கூடும், குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்நோக்கவேண்டியேற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குளோபல் மற்றும் வறுமைப் பகுப்பாய்வு மையத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கையின் உருமாறும் பொருளாதார வளர்ச்சியை 2025 முதல் 2030 வரை நிலைநிறுத்துதல்” என்ற தலைப்பிலான அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி, மத்திய வங்கியின் தற்போதைய உதவி ஆளுநர் சந்திரநாத் அமரசேகர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் யெவெட் பெர்னாண்டோ மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் சிரிமல் அபேரத்ன ஆகியோர் அடங்கிய ஒரு சுயாதீன ஆராய்ச்சி குழுவால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-
கடந்த காலத்தில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி களிலிருந்து இலங்கை மீண்டு வருகிறது. இலங்கை தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதுடன், தற்போதுள்ளபேரியல் பொருளாதார உறுதிப்படுத்தலைப் பராமரிக்கவேண்டும். நாட்டின் நலனைக்கருத் திற்கொண்டு பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகளைச் செயற்படுத்தவேண்டும். கடுமையான கடன்மறுசீரமைப்பு மற்றும் அதிகரித்து வரும் வறுமையைத் தவிர்க்கக் கட்டமைப்புச் சீர்திருத்தங்களை அவசரமாகச்செயற்படுத்துவது அவசியம். மறுசீரமைப்புகள் இல்லையெனில், ஏற்கனவே உயர்ந்த வறுமை நிலைகள் மேலும் உயரக்கூடும்- என்றுள்ளது.
