இலங்கை
இலங்கைக்கு 62,000 சுற்றுலாப் பயணிகள் வருகை!
இலங்கைக்கு 62,000 சுற்றுலாப் பயணிகள் வருகை!
இந்த மாதத்தின் முதல் 12 நாட்களில் இலங்கைக்கு 62,741 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதன்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 18,299 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை 29.2 சதவீதமாக பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
மேலும், ஒக்டோபர் மாதம் சீனாவிலிருந்து 5,417 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,874 பேரும், ஜேர்மனியிலிருந்து 3,804 பேரும் மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து 2,954 பேரும் வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
