சினிமா
ரசிகை ரேவதியின் மரணம்!! போலிஸ் கேஸ் வந்ததும் 25 லட்சம் கொடுத்த அல்லு அர்ஜுன்..

ரசிகை ரேவதியின் மரணம்!! போலிஸ் கேஸ் வந்ததும் 25 லட்சம் கொடுத்த அல்லு அர்ஜுன்..
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி ரிலீஸானது புஷ்பா 2. இப்படம் ரிலிஸாகிய முதல் நாளில் 275 கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.தற்போது 3நாட்கள் முடிவில் புஷ்பா 2 படம் 405 கோடி வசூலை ஈட்டி மிகப்பெரிய சாதனையை பெற்றுள்ளது. இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் பிரீமியர் ஷோ 10 மணிக்கு திரையிடப்பட்ட போது அல்லு அர்ஜுனும், ராஷ்மிகா மந்தனாவும் ஹைதராபாத் திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் பார்த்துள்ளனர்.இதனால் ரசிகர்கள் கூட்டல் அதிகரிக்க கூட்ட நெரிசல் ஏற்பட்டு போலிசார் தடியடி நடத்தினார். இதனால் கூட்ட நெரிசலில் சிக்கிய 39 வயது ரேவதி என்ற பெண்ணும் அவரது 9 வயது மகனும் மூச்சின்றி சுயநினைவை இழந்ததை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். ஆனால் ரேவதி முன்னதாகவே இறந்துவிட்டதாகவும் மகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது.கூட்ட நெரிசலில் மேலும் சிலர் காயமடைந்துள்ள நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அல்லு அர்ஜுன் மீது பலரும் கோபத்தில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதனை அறிந்த அல்லு அர்ஜுன், இந்த இக்கட்டான சூழலில் அந்த குடும்பத்தினருடன் தங்கள் உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தார்.மேலும் இந்த சம்பவம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், இதனால் படத்தில் கொண்டாட்டங்களில் தங்களால் பங்கேற்க முடியவில்லை என்றும் ரேவதியின் குடும்பத்தினருக்கு ஆழந்த அனுதாபத்தையும் தெரிவித்தார்.பாதிக்கப்பட்ட ரேவதியின் குடும்பத்தினருக்கு தன்னுடைய சார்பில் 25 லட்சமும் படக்குழுவினரிடம் இருந்து ரேவதியின் குடும்பத்தினருக்கு எந்த உதவியும் செய்யத்தயாராக இருப்பதாகவும் அவர்களின் வலியை உணர்ந்து விரைவில் அவர்களை சந்திக்கவுள்ளதாகவும் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.