தொழில்நுட்பம்
ஆதார் கார்டு டவுன்லோட் செய்ய அலைய வேண்டாம்; வாட்ஸ்அப் போதும்; இந்த ஈஸி டிப்ஸ் டிரை பண்ணுங்க!
ஆதார் கார்டு டவுன்லோட் செய்ய அலைய வேண்டாம்; வாட்ஸ்அப் போதும்; இந்த ஈஸி டிப்ஸ் டிரை பண்ணுங்க!
யு.ஐ.டி.ஏ.ஐ (UIDAI) என்றழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் அட்டை பெறும் சேவையில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சேவையின் மூலம், பயனர்கள் தங்கள் ஆதார் அட்டையின் டிஜிட்டல் நகலை (Digital Copy) வாட்ஸ்அப் மூலமாக எளிதாக டவுன்லோடு (Download) செய்து கொள்ளலாம்.ஆதார் அட்டை தொலைந்து விட்டாலோ அல்லது புதிதாக மாற்றங்கள் செய்யப்பட்டாலோ, அதன் டிஜிட்டல் நகலைப் பெற ஆதார் வெப்சைட்-க்கு சென்று தேடல் தெரிவுகளைப் பயன்படுத்துவது பலருக்குச் சவாலாக இருந்தது. இந்தக் சிரமத்தைத் தீர்க்கும் விதமாக, UIDAI ஆனது வாட்ஸ்அப் ஆதார் கார்டு டவுன்லோட் (WhatsApp Aadhaar Card Download) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவையின் மூலம் ஆதார் அட்டையின் புதிய நகலை சில நிமிடங்களில் டவுன்லோட் செய்ய முடியும். வாட்ஸ்அப் மூலமே டிஜிட்டல் நகல் கிடைப்பதால், அதை மற்றவர்களுக்கு பகிரவும், தேவைப்படும்போது உடனடியாகப் பயன்படுத்தவும் எளிதாக இருக்கும்.இந்தச் சேவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டிஜிட்டல் ஸ்டோரேஜ் தளமான டிஜிலாக்கர் (DigiLocker) மூலமாக வழங்கப்படுகிறது. எனவே, வாட்ஸ்அப் வழியாக டிஜிட்டல் நகலைப் பெறுவது பாதுகாப்பானதாகவும் மற்றும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்கிறது.யாரெல்லாம் பயன்படுத்தலாம்?இந்தச் சேவை அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் கிடைக்கிறது. ஆனால், உங்கள் மொபைல் எண் கட்டாயம் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஓடிபி (OTP) பெறுவதற்கு, அந்த எண் உபயோகத்தில் இருக்க வேண்டும்.வாட்ஸ்அப் மூலம் ஆதார் டவுன்லோட் செய்வது எப்படி?வாட்ஸ்அப் மூலம் ஆதார் அட்டை நகலைப் பதிவிறக்க, கீழ்க்கண்ட எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்: மை.கவ் ஹெல்ப் டெஸ்க் எண்ணைச் சேமிக்கவும்.முதலில் +91-9013151515 என்ற எண்ணை மொபைல் Contacts சேமித்துக் கொள்ளுங்கள். இது மைகவ் ஹெல்ப்டெஸ்க் (MyGov Helpdesk) எண் ஆகும்.வாட்ஸ்அப் செயலியைத் திறந்து, சேமித்த இந்த எண்ணின் உரையாடல் பகுதிக்கு (Chat) செல்லவும்.அந்தச் சாட்டில் ‘Hi’ அல்லது ‘Namaste’ என்று மெசேஜ் அனுப்பவும்.சில நிமிடங்களில் ஆதார் தொடர்பான பல்வேறு சேவைகளின் பட்டியல் உங்களுக்குக் காண்பிக்கப்படும்.அதில் ‘டிஜிலாக்கர் ஆதார் டவுன்லோட்’ (DigiLocker Aadhaar Download) என்ற தெரிவைத் தேர்ந்தெடுக்கவும்.உங்க ஆதார் எண் பிழையின்றி டைப் செய்து அனுப்பவும்.தொடர்ந்து, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி (OTP) எண்ணை உள்ளிடுங்கள்.ஓடிபி உறுதி செய்யப்பட்ட உடனேயே, உங்கள் ஆதார் அட்டை PDF வடிவில் வாட்ஸ்அப் மூலமாகவே அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம், ஆதார் இணையதளத்திற்குச் சென்று டவுன்லோட் செய்வதை விடக் குறைவான நேரத்தில், எளிமையான முறையில் இந்தச் சேவையை முடிக்க முடியும்.
