சினிமா
FJ_வை ஓரங்கட்டி ரொமான்ஸ் பண்ணும் ஆதிரை.! திவாகருக்கு இங்கிலீஷ்ல தெரிஞ்ச ஒரு வார்த்தை
FJ_வை ஓரங்கட்டி ரொமான்ஸ் பண்ணும் ஆதிரை.! திவாகருக்கு இங்கிலீஷ்ல தெரிஞ்ச ஒரு வார்த்தை
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி ஆரம்பமானது. இம்முறை 10 ஆண் போட்டியாளர்களும், 9 பெண் போட்டியாளர்களும், ஒரு திருநங்கையும் இந்த நிகழ்ச்சியில் களம் இறக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குள், இந்த வீட்டில் எனக்கு ரியாலிட்டி தெரியவில்லை , எல்லோரும் போலியாக இருப்பதாக கூறி நந்தினி வெளியேறினார். அதன் பின்பு வார இறுதியில் பிரவீன் காந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அத்துடன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் தான் எல்லா ப்ரோமோ வீடியோக்களிளும் வருகிறார் என்று புகார் எழுந்தது. எனினும் தற்போது திவாகருக்கு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. இந்த நிலையில், திவாகருக்கு ஆங்கிலத்தில் ஒரே வார்த்தை தான் தெரியும் போல என்று பார்வையாளர்கள் பேச தொடங்கி விட்டனர். அதேபோல அரோரா துஷாரிடமும், ஆதிரை FJ யிடமும் நெருக்கமாக நடந்து கொள்வதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.அதாவது, ஏற்கனவே சாப்பாடு விஷயத்தில் பர்சனல் வெஞ்சன்ஸ் என்று சபரியிடம் திவாகர் கத்தி பேசினார். மீண்டும் பார்வதி விஷயத்தில் பர்சனல் ரேஞ்சர்ஸ் என்று சபரிநாதனை பார்த்து கத்தினார். அதன்பின்பு பார்வதியும் பர்சனல் வெஞ்சன்ஸ், பர்சனல் டார்கெட் என்று சொல்ல, சபரியோ ஆமாம் என்றார்.தற்போது திவாகரும் விஜே பார்வதியும் தான் கன்டன்ட் கொடுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் எல்லோரையும் வினோத் வினோத் என்று திவாகர் சொல்லுவது கானா வினோத்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எல்லோரையும் பார்த்து வினோத் வினோத் என்று சொல்லுவது பாசமா? இல்லை என் பெயரை மட்டும் தான் தெரியுதா? என்று தெரியவில்லை என திவாகரை கானா வினோத் திட்டியும் இருந்தார். இன்னொரு பக்கம் அரோரா துஷாரிடம் மிகவும் நெருக்கமாக நடந்து கொள்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் துஷார் மட்டும் அரோராவை தொட்டு தொட்டு பேசினால் பெண்ணுக்கு நியாயம் கேட்டு கிளம்பி இருப்பார்கள். ஆனால் இதனை விஜய் சேதுபதியும் கேட்பது போல தெரியவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதற்கு இடையில் ஆதிரை எஃப்.ஜே.வை ஓரங்கட்டி ரொமான்ஸ் செய்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோவும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதை பார்த்த ரசிகர்கள் இது பிக் பாஸ் வீடா? இல்லை காதலர் பூங்காவா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
