சினிமா
மயில் அப்பாவின் செயலால் கோபத்தில் கொந்தளிக்கும் சரவணன்.. மீனா எடுத்த அதிரடி முடிவு.!
மயில் அப்பாவின் செயலால் கோபத்தில் கொந்தளிக்கும் சரவணன்.. மீனா எடுத்த அதிரடி முடிவு.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மீனா பாண்டியன் வீட்ட வந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்ப ராஜியை பார்த்து நீங்க எல்லாம் இல்லாதது ரொம்ப bore அடிக்குது என்கிறார். அதைக் கேட்ட பாண்டியன் கோமதி கிட்ட நான் தான் சொன்னனே காலையில மீனா டான் என்று இங்க வந்து நிக்கும் என்று…. அதனை அடுத்து மீனா இன்னும் ஒரு மாதம் தான் அதுக்குப் பிறகு நாங்க ரெண்டு பேரும் இங்க வந்திடுவம் என்கிறார்.பின் மீனாவும் ராஜியும் ரோட்டில நடந்து போகும் போது செந்திலைப் பற்றிக் கதைச்சுக் கொண்டு போகிறார்கள். அப்ப மீனா ராஜி கிட்ட தனக்கு அந்த வீடு பிடிக்கல என்கிறார். அந்த நேரம் பார்த்து செந்தில் மீனாவுக்கு போன் எடுத்து காய்கறி எல்லாம் வாங்கிட்டு வந்திட்டன் நீ சாப்பிட்டியா என்று கேட்கிறார். அதுக்கு மீனா நான் உங்க வீட்ட போய் சாப்பிடுடன் என்கிறார்.மறுபக்கம் பாண்டியனோட கடையில நின்ற பழனி கால் வலிக்குது என்று சொல்லுறார். அதைப் பார்த்த பாண்டியனும் சரவணனும் பதறி அடிச்சு ஓடுறார்கள். பின் பாண்டியன் கடைக்கு வந்த மயிலோட அப்பா கல்லாவை பார்த்திட்டு காலையிலேயே நல்ல வியாபாரம் போல என்கிறார். அதைக் கேட்ட சரவணன் கோபத்தோட மயிலோட அப்பாவை எழும்ப சொல்லிட்டு பழனியை இருக்கச் சொல்லுறார்.பின் மயில் தனக்கு கொஞ்சம் களைப்பா இருக்கு என்கிறார். அதைக் கேட்ட உடனே பழனி தான் எழும்பி மயிலை இருக்கச் சொல்லுறார். அதைப் பார்த்த சரவணன் பழனியை வீட்ட போகச் சொல்லுறார். அதனை அடுத்து கோமதி கதிர் கிட்ட அம்மாவோட பிறந்தநாளுக்கு போக முடியாது என்று சொல்லி கவலைப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
