Connect with us

சினிமா

17 வயதில் ஆப்ரேஷன்..காதலன் போட்ட கண்டீஷன்!! பிக்பாஸ் அப்சராவின் மறுப்பக்கம்…

Published

on

Loading

17 வயதில் ஆப்ரேஷன்..காதலன் போட்ட கண்டீஷன்!! பிக்பாஸ் அப்சராவின் மறுப்பக்கம்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 தற்போது ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில், நந்தினி மனதளவில் என்னால் இருக்க முடியாது என்று வீட்டைவிட்டு வெளியேறினார். இதனைதொடர்ந்து பிரவீன் காந்தி குறைவான வாக்குகளை பெற்று எலிமினேட் செய்யப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். கடந்தவாரம் முதலே போட்டியாளர்களின் பின்புலம் பற்றி பல தகவல்கள் இணையத்தில் பகிரபட்டு வருகிறது.அந்தவகையில், போட்டியாளர் அப்சரா சி ஜே பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளாவை சேர்ந்த அப்சரா, மிஸ் சென்னை பட்டம் வென்ற நிலையில் 2021ல் நடந்த மிஸ் இந்தியா போட்டியில் ரன்னராக வந்துள்ளார்.பள்ளியில் படிக்கும்போதே இவரின் நடை, உடை, பாவனைகளை பார்த்து பெற்றோர்கள் இவர் பெண் போல் இருக்கிறார் என்று கண்டித்திருக்கிறார்கள். ஆனாலும், இவரது சகோதரர், அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், அவனை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆதரவு கொடுத்திருக்கிறார். ஆனாலும் அவரை பள்ளியில் கேலி, கிண்டல் செய்துள்ளனர். அதை பொருட்படுத்தாமல் அப்சரா, தன் படிப்பில் கவனம் செலுத்தி பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்தார்.முதலில் பி எஸ் சி பட்டப்படிப்பை முடித்தப்பின் எம் எஸ் பி படிப்பில் பல்கலைக்கழகத்தில் 2வது இடம் பிடித்து அசத்தினார். இதற்குப்பின் கேரளாவில் ஒரு ட்ரெய்னிங் அகாடமியில் மேக்கப்பற்றி முறையாக பயிற்சிப்பெற்று, தனது 16 வயதில் தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்து ஆப்ரேஷன் செய்துக்கொள்ள நினைத்துள்ளார். ஆனால் எப்படி செய்வது என்ற பயமும் இருந்ததால், அதைப்பற்றி தெரிந்துக்கொள்ள முயற்சி செய்து ஒருக்கட்டத்தில் ஆப்ரேஷன் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறார்.பின் தன்னுடைய 17வது வயதில் ஆப்ரேஷன் செய்து கொண்ட அப்சரா, பெண்ணாக மாறி, தனது உண்மையான பெயரான கிச்சு சி ஜே என்பதை அப்சரா சி ஜே-வாக மாற்றிக்கொண்டார். மாயா படத்தில் வரும் நயன்தாராவின் பெயர் தான் அப்சரா. இதைப்பார்த்து தான் தன் பெயரை அப்சரா என்று வைத்துள்ளார். மேலும், 11-ஆம் வகுப்பு படிக்கும்போது தன் வகுப்பு தோழன் ஒருவருடன் காதல் வயப்பட்ட அப்சரா, அவனுடன் பழகியுள்ளார்.அப்சரா பற்றி அனைத்தும் தெரிந்துக்கொண்ட அந்த காதலன் அவருக்கு துணையாக வந்துள்ளார். ஒருக்கட்டத்தில் ஆப்ரேஷன் செய்துகொண்ட அப்சரா, பெண்ணாக மாறியதும், நீ அழகாக இருக்கிறாய், உன்னை அனைவரும் பார்ப்பார்கள்ம், வெளியில் யாருடனும் பேசக்கூடாது, பழகக்கூடாது என்று கண்டீஷன் போட்டுள்ளார் காதலன்.இந்த டார்ச்சரை தாங்கிக்கொள்ள முடியாத அப்சரா, அந்த உறவில் இருந்து வெளியேறி வாழ்க்கையை பார்த்துள்ளார். தற்போது பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறர் அப்சரா சி ஜே.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன