இந்தியா
தலையில் சூடு, நேரில் கண்ட சாட்சி இல்லை… ஹரியானா ஐ.பி.எஸ், ஏ.எஸ்.ஐ தற்கொலைகளில் இருக்கும் ஒற்றுமைகள்
தலையில் சூடு, நேரில் கண்ட சாட்சி இல்லை… ஹரியானா ஐ.பி.எஸ், ஏ.எஸ்.ஐ தற்கொலைகளில் இருக்கும் ஒற்றுமைகள்
ஹரியானாவில் கடந்த 7-ஆம் தேதி ஐ.பி.எஸ் அதிகாரி பூரன் குமார் என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் இருந்து எட்டு பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்று போலீசாரால் கண்டறியப்பட்டது. அதில், டி.ஜி.பி ஷத்ருஜீத் கபூர், ரோத்தக் எஸ்.பி. நரேந்திர பிஜார்னியா உட்பட ஒன்பது அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும், போலீஸ் அதிகாரி பூரன் குமார் தலையில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதை கண்ணால் பார்த்த சாட்சியங்களும் இல்லை. இந்நிலையில், தற்போது இதேபோன்று ரோத்தக் ஏ.எஸ்.ஐ போலீஸ் அதிகாரி சந்தீப் குமாரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் இருந்து நான்கு பக்கங்களை கொண்ட கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், சந்தீப் குமார், பூரன் குமார் மீது ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். பூரன் குமாரின் குடும்பத்தினர் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய மறுப்பு தெரிவித்து இதுவரை உடலை பெறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கபூர் மற்றும் பிஜார்னியாவைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சந்தீப் குமாரின் குடும்பமும் அவரது பிரேத பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த நிலையில், பூரன் குமாரின் குடும்பத்தை ஆதரிக்கும் அனைவருக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.சண்டிகர் காவல்துறை பூரன் குமாரின் வழக்கை விசாரித்து வரும் நிலையில், ரோத்தக் காவல்துறை சந்தீப் குமாரின் மரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும், மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக ஹரியான மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்க
