வணிகம்
அதிக வட்டி: போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் மாதம் இவ்வளவு முதலீடு செய்யுங்க; 15 ஆண்டுகளில் ரூ.40 லட்சம் உங்கள் கையில்!
அதிக வட்டி: போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் மாதம் இவ்வளவு முதலீடு செய்யுங்க; 15 ஆண்டுகளில் ரூ.40 லட்சம் உங்கள் கையில்!
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும், ஆபத்து இல்லாத சேமிப்புத் திட்டங்களைத் தேடுபவர்களுக்கு எப்போதும் முதலில் நினைவுக்கு வருவது தபால் நிலையத் திட்டங்கள்தான். சிறிய முதலீட்டாளர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை போஸ்ட் ஆபிஸ் வழங்குகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்டவை என்பதால், முதலீட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.அந்த வகையில், சிறு முதலீட்டாளர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள ஒரு திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (PPF) ஆகும்.வட்டி மற்றும் வரிச் சலுகை:தற்போது, பி.பி.எஃப் (PPF) திட்டத்திற்கு அரசாங்கம் ஆண்டுக்கு 7.1% வரி இல்லாத (Tax-Free) வட்டியை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு (ரூ.1.5 லட்சம் வரை) வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், நீங்கள் ஈட்டும் வட்டிக்கும், முதிர்ச்சியின்போது பெறும் மொத்தத் தொகைக்கும் வரி கிடையாது.₹40 லட்சம் பெறுவது எப்படி?நீங்கள் ஒரு பெரிய தொகையைச் சேமிக்க விரும்பினால், பி.பி.எஃப் (PPF) ஒரு சிறந்த வழி. உதாரணமாக, ஒரு முதலீட்டாளர் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.500 உடன் கணக்கைத் திறக்கலாம். அதிகபட்ச முதலீடு ஒரு நிதியாண்டிற்கு ரூ.1.5 லட்சம் ஆகும்.பிற பலன்கள்:பி.பி.எஃப் (PPF) திட்டத்திற்கு 15 ஆண்டுகள் ‘லாக்-இன்’ காலம் இருந்தாலும், கணக்குத் திறந்து முதல் நிதியாண்டு முடிந்த பிறகு, முதலீட்டாளர்கள் கடன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், கணக்குத் தொடங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. எனவே, பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான நீண்ட கால முதலீட்டுக்கு பி.பி.எஃப் ஒரு அரிய வாய்ப்பாகும்.
