Connect with us

உலகம்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் 48 மணி நேர சண்டை நிறுத்தம்

Published

on

Loading

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் 48 மணி நேர சண்டை நிறுத்தம்

ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தான் தலிபான், பாகிஸ்தான் வீரர்கள் அடிக்கடி மோதிக்கொள்ளும் சம்பவம் அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் வியாழக்கிழமை பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் விமானப்படை, திடீரென காபூல் நகர் மீது தாக்குதல் நடத்தியது. அத்துடன் இருநாட்டு எல்லையில் உள்ள நகரின் மார்க்கெட் மீது தாக்குதல் நடத்தியது.

Advertisement

இது ஆப்கானிஸ்தான் தலிபான் அரசுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இருநாட்டு எல்லையில், எல்லைத்தாண்டி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது தலிபான்கள் பயங்கர தாக்குதல நடத்தினர். இதில் 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று காலை எல்லையில் மீண்டும் மோதிக் கொண்டனர். இதில் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் டிரோன்கள் மூலம் எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் புறக்காவல் நிலையத்தை தகர்த்தனர்.

images/content-image/1760546278.jpg

அதேபோல் பாகிஸ்தான் ராணுவமும் தாக்குதல் நடத்தியுள்ளது. இரு தரப்பிலும் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்தது.

Advertisement

தலிபான், பாகிஸ்தான் ராணுவத்தின் புறக்காவல் நிலையத்தை தகர்த்ததுடன், ராணுவ டேங்குகளை கைப்பற்றியுள்ளது. இந்த டேங்குகள் மூலம் தலிபான் நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் குறிவைத்திருந்தது.

பாகிஸ்தானின் சமான் மாவட்டமும், ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு மாவட்டமான ஸ்பின் போல்டாக் மாவட்டத்தின் எல்லையில்தான் இந்த பயங்கர சண்டை நடந்தது.

ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணம்- பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் இடையே உள்ள எல்லை மாவட்டமான ஸ்பின் போல்டாக்கில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதில் 12 மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

Advertisement

images/content-image/1760546313.jpg

பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு ஆப்கானிஸ்தான் தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் தாக்குதலில், ஏராளமான பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் ஆயுதங்கள் மற்றும் டேங்குகள் கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தின் புறக்காவல் நிலையம் போன்றவைகள் அழிக்கப்பட்டன எனத் தெரிவித்துள்ளது.

அதேவேலையில் எந்தவித தூண்டுதல் இல்லாமல் பாகிஸ்தான் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது என பாகி்ஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிலையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே 48 மணி நேர சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் சண்டை நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன