சினிமா
அப்போ எல்லாரும் கூட்டுக் களவாணியா? விஜய் கூட ராஷ்மிகாவுக்கு விரைவில் டும்..டும்..

அப்போ எல்லாரும் கூட்டுக் களவாணியா? விஜய் கூட ராஷ்மிகாவுக்கு விரைவில் டும்..டும்..
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவரை நேஷனல் கிரஷ் ஆகவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். அதேபோல விஜய் தேவரகொண்டாவும் ராக்கெட் ஹீரோவாக வளர்ந்து கொண்டுள்ளார்.2019 ஆம் ஆண்டிலிருந்து ராஷ்மிகாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையில் காதல் உள்ளதாக தகவல்கள் வெளியாவது தொடர்ச்சியாக உள்ளது. இவர்கள் இருவரும் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சுமார் 132 கோடிகளை வசூலித்திருந்தது.அந்த படத்தில் ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா ஜோடியின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. அதன் பின்பு காம்ரேட் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த படத்தில் நடிக்கும் போது தான் இவர்கள் காதலிக்க தொடங்கியதாக கூறப்பட்டது.d_i_aஎனினும் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக எந்த தகவலையும் வெளியிடாமல் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளில் டேட்டிங் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். சமீபத்தில் இவர்கள் இருவரும் வெளிநாட்டில் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து டேட்டிங் சென்று இருந்தமை புகைப்படங்களின் ஊடாக வெளியானது.இவ்வாறு இருவரும் ஹோட்டல் ஒன்றில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. இதனால் கூடிய விரைவிலேயே இவர்களின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என ரசிகர்கள் தெரிவித்து வந்தார்கள்.இந்த நிலையில், புஷ்பா 2 படத்தை விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்துடன் இணைந்து பார்த்துள்ளார் ராஷ்மிகா. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதன் ஊடாக ரசிகர்களின் சந்தேகம் மேலும் பலமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.