டி.வி
ரொம்ப கிரிஞ்சா இருக்கு மனோஜ்.. விஜயா குடும்பத்திற்கு டாக்டர் சொன்ன உண்மை?
ரொம்ப கிரிஞ்சா இருக்கு மனோஜ்.. விஜயா குடும்பத்திற்கு டாக்டர் சொன்ன உண்மை?
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜ் வீட்டில் குழந்தை போல நடந்து கொள்கின்றார். தொட்டில் கட்டி, பால் போத்தலில் பால் குடித்து, தவண்டு விளையாடுகின்றார். இதை பார்த்த விஜயா அதிர்ச்சி அடைகின்றார். இதனால் மொத்த குடும்பத்தையும் கத்தி கூப்பிட்டு மனோஜ் பண்ணுவதை காட்டுகின்றார். மேலும் ரோகிணி தான் ஏதோ பண்ணியதாக அவர் மீது குற்றம் சாட்டுகின்றார். ஆனால் மனோஜ் டாக்டரை சந்தித்ததாகவும், குழந்தை பிறக்க வேண்டும் என்றால் இப்படித்தான் பண்ண வேண்டும் என்று அவர் கூறியதாகவும், அதற்காகத்தான் மனோஜ் இப்படி பண்ணுவதாகவும் ரோகிணி தெரிவித்தார். இதனால் அந்த டாக்டரின் நம்பருக்கு கால் பண்ணி முத்து விசாரிக்க , டாக்டர் தனது அப்பா தான் அப்படி சொல்லி இருக்கார். அவர் கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லுகின்றார். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். விஜயா கடுப்பாகின்றார். அதன் பின்பு மனோஜ் ஒரு படித்த முட்டாள் என்பதை நிரூபிக்க , மேசையில் தண்ணீர் கப்பை வைத்து அதை எடுக்குமாறு சொல்லுகின்றார். ஆனால் மனோஜ் நான் ஜிம் எல்லாம் போறனான் என்று அதனை கடினமாக தூக்க விழுந்து விடுகிறார்.இறுதியாக ரோகிணியின் அம்மா அவருக்கு போன் பண்ணி, வித்யா தனக்கு கல்யாண பத்திரிக்கை வைத்ததாக சொல்கின்றார். இதனால் கல்யாணத்திற்கு முத்து மீனா வருவார்கள், நீ அங்கு வர வேண்டாம் என்று ரோகிணி சொல்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட் .
