இலங்கை
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சிவப்பு நண்டுகள்!
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சிவப்பு நண்டுகள்!
மன்னார் தீவுப்பகுதி கடற்றொழில் சார் கிராமங்களை கொண்ட பகுதியாகும். இவற்றில் தாழ்வுபாடு ஒரு கிராமம்ஆகும். குறித்த கிராமத்தில் கடந்த பல நாட்களாக ‘ சிவப்பு நண்டு’ என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டினால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நண்டுகள் மீனவர்களின் வலைகளில் பாரியளவில் சிக்குவதால் மீனவர்களின் வலை தொகுதிகள் சேதமடைந்துள்ளன. குறித்த சிவப்பு நண்டை எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்த முடியாது எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இப் பகுதி மீனவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு முன் குறித்த சிவப்பு நண்டினால் ஒரு தடவை இப்பகுதியில் பாரிய சேதம் ஏற்பட்டு இருந்ததாகவும் அதன் பிற்பாடு இந்த ஆண்டு இவ்வாறு வருகை தருவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் மீனவர்களின் வலைகளில் சிக்கும் குறித்த நண்டுகளை வலையில் இருந்து பிரித்து எடுக்க முடியாத நிலை காணப்படுவதோடு, இதனால் வலைகள் பாதிக்கப்படுவதோடு, தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
