இலங்கை
சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினம் – ஜனாதிபதியின் செயலாளருக்கு அணிவிக்கப்பட்ட முதல் கொடி
சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினம் – ஜனாதிபதியின் செயலாளருக்கு அணிவிக்கப்பட்ட முதல் கொடி
15ஆம் திகதி இன்று சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்துடன் இணைந்ததாக, கொடி விற்பனை வாரத்தை முன்னிட்டு முதல் கொடி, அடையாள ரீதியாக இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் தலைவி நில்மினி சமரவீர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கு கொடியை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அணிவித்தார்.
பின்னர், வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் வெள்ளைப் பிரம்புகளை வழங்கி வைத்தார். கொடி விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் பார்வையற்றோர் சமூகத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் சம்மேளனத்தின் தலைவி தெரிவித்தார்.
இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதியின் செயலாளர் கலந்துரையாடியதுடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் உதவிச் செயலாளர் சமீர புபுது குமார உள்ளிட்ட பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
