Connect with us

பொழுதுபோக்கு

ஜாய் கிறிஸில்டா நினைச்சது மாதிரி நடக்காது… கோர்ட்டுக்கு வெளியே அது முடியாது: மாதம்பட்டி ரங்கராஜ் பரபர அறிக்கை

Published

on

Joy Madhampatty

Loading

ஜாய் கிறிஸில்டா நினைச்சது மாதிரி நடக்காது… கோர்ட்டுக்கு வெளியே அது முடியாது: மாதம்பட்டி ரங்கராஜ் பரபர அறிக்கை

பிரபல சமையல் கலை நிபுணரும், தமிழ் திரையுலகில் நடிகராகவும் அறியப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜ் மீது, பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாநில மகளிர் ஆணையம் எனப் பல தளங்களில் புகார் அளித்த நிலையில், தற்போது நீதிமன்றத்தின் கதவுகளையும் தட்டியுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் குறித்துப் பல்வேறு பரபரப்புக் குற்றச்சாட்டுகளை மீண்டும் முன்வைத்தது இச்சம்பவத்தின் வீரியத்தை அதிகரித்தது.இந்த நிலையில், தனது தரப்பு நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் விதமாக மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று இரவு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் சாரம்சத்தைக் கீழே காணலாம்:”நீதிமன்றத்திற்கு வெளியே ஜாய் கிரிசில்டா எழுப்பியுள்ள தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பலர் என்னை அணுகி வருகின்றனர். நீதித்துறை செயல்பாட்டின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. சட்டம் தன் கடமையைச் செய்து, உண்மை நிலைநாட்டப்படும். இந்தச் சர்ச்சைக்குத் தீர்வு காண்பதற்காக நான் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளேன்.இந்தப் பிரச்சினை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபட நான் விரும்பவில்லை. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்தவிதமான கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.#MadhampattyRangarajpic.twitter.com/ILrlEOfebsநான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படியே எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பதுபோல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்,” என்று மாதம்பட்டி ரங்கராஜ் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.இதன் மூலம், இந்த விவகாரத்தில் நீதிமன்ற நடைமுறையே தனது இறுதி முடிவு என்பதையும், நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் மாதம்பட்டி ரங்கராஜ் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன