Connect with us

பொழுதுபோக்கு

சினிமாவில் நான் சீனியர்… விஜய் சேதுபதி போட்டியாளர்களை நோஸ்கட் செய்கிறார் – பிரபல இயக்குநர் குற்றச்சாட்டு

Published

on

vijs

Loading

சினிமாவில் நான் சீனியர்… விஜய் சேதுபதி போட்டியாளர்களை நோஸ்கட் செய்கிறார் – பிரபல இயக்குநர் குற்றச்சாட்டு

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நந்தினி, பிரவீன் காந்தி வெளியேறிய நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு நாளும் என்ன டாஸ்க் இன்று நடக்கும் என்ன பிரச்சனை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் கடும் மோதம் ஏற்பட்டு வருகிறது.ஆரம்பத்தில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை எல்லோரும் டார்கெட் செய்து வந்த நிலையில் தற்போது அவர் எல்லோருக்கும் செல்லப்பிள்ளை ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொருத்தரும் தன் முகமூடிகளை கழற்றிக் கொண்டு வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டனர். இதனாலேயே பிக்பாஸ் வீட்டில் தினம் பிரச்சனைகள் ஏற்படுகிறது.அதுமட்டுமல்லாமல், பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும், இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமல்லாமல், நடிகர் விஜய் சேதுபதி, கமல்ஹாசன் போன்று தொகுத்து வழக்கவில்லையோ என்று பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனை நியாயப்படுத்தும் சம்பவங்கள் தான் தற்போது பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி வருகிறது.அதாவது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் சேதுபதி , பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கலந்துரையாடுவார். அப்போது, அந்த வாரத்தில் நடந்த நிகழ்வுகளை வைத்து விவாதங்கள் மேற்கொள்ளப்படும். அப்படி விவாதம் செய்யும் பொழுது விஜய் சேதுபதி போட்டியாளார்களை பேசவிடாமல் தனது ஆளுமையை காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களையும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கினர்.இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து சென்ற இயக்குநர் பிரவீன் காந்தி, விஜய் சேதுபதி தான் பிக்பாஸ் என்று நினைத்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “விஜய் சேதுபதி எனக்கு சினிமாவில் ஜூனியர், ஆனால், பிக்பாஸில் சீனியர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அவரை எதிர்த்து பேசுவதா என்று எனக்கு தெரியவில்லை. விஜய் சேதுபதி அவர்களே கொஞ்சம் போட்டியாளர்களையும் பேசவிடுங்கள். நீங்கள் யாரையும் பேசவிடுவதில்லை. தயவு செய்து போட்டியாளர்களை பேசவிடுங்கள். தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலே முதல் முறை — #PraveenGandhi gave an open interview directly about #VJSபடத்துல நான் உங்க senior… பிக்பாஸ்ல junior… ஆனா nose cut பண்ணுறதை நிறுத்துங்க! போட்டியாளர் பேசட்டும்! 🔥🔥#BiggBossTamil9#BiggBoss9Tamil#BiggBossTamilpic.twitter.com/67kiASWwXaதொடர்ந்து நீங்கள் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளீர்கள். உங்கள் பிசியான நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறீர்கள் என்று புரிகிறது. இருந்தாலும், போட்டியாளர்கள் சொல்ல வருவதற்கு முன்பு நோஸ் கட் செய்கிறீர்கள் அதை கொஞ்சம் மாற்றுங்கள். விஜய் சேதுபதி போட்டியாளர்களை  அந்த ஆளுமைக்குள் கொண்டுவர பார்க்கிறார். நான் சொல்வதை தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று. கிட்டதட்ட பிக்பாஸே அவர் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்” என்றார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன