இலங்கை
எகிறும் தேசிக்காய் விலை!
எகிறும் தேசிக்காய் விலை!
இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது என்று சந்தை வட்டாரம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் தேசிக்காய் 3,200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
சந்தைகளில் சில்லறை விலை 2,800 ரூபா முதல் 3,200 ரூபா வரையும் ஒரு தேசிக்காயினுடைய விலை 50 ரூபாவுக்கும் அதிகமாகவும் காணப்படுகிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது நேற்று தேசிக்காயின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
சந்தைக்கு தேசிக்காயின் வரவு குறைவடைந்து காணப்படுகின்றமையே குறித்த விலை அதிகரிப்புக்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
