இலங்கை
வாய்பேச முடியாத யுவதி மீது துஷ்பிரயோக முயற்சி சந்தேகநபருக்கு விளக்கமறியல்!
வாய்பேச முடியாத யுவதி மீது துஷ்பிரயோக முயற்சி சந்தேகநபருக்கு விளக்கமறியல்!
வாய்பேச முடியாத யுவதி மீது துஷ்பிரயோக முயற்சி மேற்கொண்ட குற்றம்சாட்டில், சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அல்லைப்பிட்டிப் பகுதியில் உள்ள குறித்த யுவதியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற நபர் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
கடந்த 27ஆம் திகதி இந்த முறைப்பாடு வழங்கப்பட்ட போதிலும், சந்தேகநபர் பொலிஸாரின் நடவடிக்கையில் சிக்காமல் இரு வாரங்களுக்கு மேலாகத் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து அவர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அவர் நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே, சந்தேகநபரை எதிர்வரும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
