Connect with us

இலங்கை

ரயிலால் வீழ்ந்து பெண்உயிரிழப்பு; சாவகச்சேரியில் சம்பவம்

Published

on

Loading

ரயிலால் வீழ்ந்து பெண்உயிரிழப்பு; சாவகச்சேரியில் சம்பவம்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரிப் பகுதியில், ரயிலால் இறங்க முற்பட்ட பெண்ணொருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்தார். சு.சுபாசினி (வயது-53) என்ற
பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ரயிலில் பயணித்த அந்தப் பெண், சாவகச்சேரி – சங்கத்தானைப் பகுதியில் இறங்க முற்பட்டுள்ளார். அவர் அமர்ந்திருந்த பெட்டிக்கு அருகில் வெளிச்செல்லும் பகுதி இல்லாததால், வேறு பகுதியூடாகச் சென்று இறங்க முற்பட்டுள்ளார். இதன்போது ரயிலும் நகரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, அந்தப் பெண் கீழே வீழ்ந்து படுகாயம் அடைந்துள்ளார். அவர் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார்.

Advertisement

பல்கலைக்கழகம் ஒன்றில் கற்கும் மகனைப் பார்ப்பதற்காகச் சென்றுவிட்டுத் திரும்பியபோதே, இந்தத் துயரச் சம்ப வம் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன