Connect with us

பொழுதுபோக்கு

Bison First Review: ‘பைசன்’ பேசும் அரசியல்; கபடி வீரர் வாழ்க்கை; படத்தை பார்த்த உதயநிதி கொடுத்த அப்டேட்

Published

on

baison movie

Loading

Bison First Review: ‘பைசன்’ பேசும் அரசியல்; கபடி வீரர் வாழ்க்கை; படத்தை பார்த்த உதயநிதி கொடுத்த அப்டேட்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ திரைப்படம் இன்று (அக்டோபர் 17, 2025) திரையரங்குகளில் வெளியானது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை மையமாக வைத்து ‘பைசன்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் துருவ் விக்ரமுடன் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாக, ‘பைசன்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்த்துள்ளார். அதன்பின்னர், படம் மற்றும் படக்குழுவினரைப் பாராட்டி அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில், “பைசன் திரைப்படத்தைப் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ் சார். வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியிலும், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வைச் சிறப்பாகப் படமாக்கி இருக்கிறார்.#Bison திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் @mari_selvaraj சார்.வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.ஓர் இளைஞன், எல்லாவற்றுக்கும்…ஓர் இளைஞன், எல்லாவற்றுக்கும் மேலாகத் தன்னுடைய கபடி விளையாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அதுவே அவனை இலக்கை நோக்கி உயர்த்துவதையும் தனக்கே உரிய பாணியில் மாரி சார் கிராஃப்ட் செய்திருக்கிறார். படம் பேசுகிற அரசியலை உள்வாங்கி மிகச்சிறப்பாக நடித்திருக்கும் தம்பி துருவ் விக்ரம் உட்பட படத்தில் நடித்துள்ள அனைத்துக் கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள். பைசன் – காளமாடன் வெல்லட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பாராட்டானது ‘பைசன்’ படக்குழுவினருக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன