இலங்கை
கீரிமலையில் கடற்படைக்கு றேடர் அமைக்க காணிகளை வழங்கமுடியாது; வலி.வடக்கு சபையில் தீர்மானம்!
கீரிமலையில் கடற்படைக்கு றேடர் அமைக்க காணிகளை வழங்கமுடியாது; வலி.வடக்கு சபையில் தீர்மானம்!
யாழ்ப்பாணம் – கீரி யாழ்ப்பாணம் மலையில் கடற்படைக்கு றேடர் அமைக்கக்கோரும் இரண்டு ஏக்கர் காணியை வழங்க முடியாது என்று வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் பிரதேசசபை சபா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற போது, றேடர் அமைப்பதற்காக கீரி மலைப்பகுதியில் கடற்படையினர் காணிகளைக் கோரும் விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது, போதைப்பொருள் ஒழிப்புக்காக றேடர் அமைக்கவே காணி கோரப்படுவதாக தெரிவித்த தேசிய மக்கள் சக்திஉறுப்பினர், காணி உரிமையாளர்களுக்கு சன்மானம் வழங்கப்படும். அதில் அரசியல் செய்யவேண்டாம் எனத் தெரிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தவிசாளரும் ஏனைய கட்சி உறுப்பினர்களும், போதைப்பொருள் ஒழிப்புக்கும் காணி சுவீகரிப்புக்கும் சம்பந்தம் இல்லை. றேடர் அமைப்பதற்கு இரண்டு ஏக்கர் தேவையில்லை. மக்களின் காணி மக்களுக்கே எனக் கூறிவிட்டு மக்கள் காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர். இந்த விடயம் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டதுடன், திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச செயலருக்குக் கடிதம் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.
