பொழுதுபோக்கு
துஷாருக்கு ரவுண்டுகட்டி கிஸ் கொடுக்கும் போட்டியாளர்கள்… என்னடா நடக்குது இங்க? வீடியோ வைரல்
துஷாருக்கு ரவுண்டுகட்டி கிஸ் கொடுக்கும் போட்டியாளர்கள்… என்னடா நடக்குது இங்க? வீடியோ வைரல்
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நந்தினி, பிரவீன் காந்தி வெளியேறிய நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு நாளும் என்ன டாஸ்க் இன்று நடக்கும் என்ன பிரச்சனை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் கடும் மோதம் ஏற்பட்டு வருகிறது.ஆரம்பத்தில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை எல்லோரும் டார்கெட் செய்து வந்த நிலையில் தற்போது அவர் எல்லோருக்கும் செல்லப்பிள்ளை ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொருத்தரும் தன் முகமூடிகளை கழற்றிக் கொண்டு வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டனர். இதனாலேயே பிக்பாஸ் வீட்டில் தினம் பிரச்சனைகள் ஏற்படுகிறது.அதுமட்டுமல்லாமல், பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும், இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமல்லாமல், நடிகர் விஜய் சேதுபதி, கமல்ஹாசன் போன்று தொகுத்து வழக்கவில்லையோ என்று பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனை நியாயப்படுத்தும் சம்பவங்கள் தான் தற்போது பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி வருகிறது.அதாவது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் சேதுபதி , பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கலந்துரையாடுவார். அப்போது, அந்த வாரத்தில் நடந்த நிகழ்வுகளை வைத்து விவாதங்கள் மேற்கொள்ளப்படும். அப்படி விவாதம் செய்யும் பொழுது விஜய் சேதுபதி போட்டியாளார்களை பேசவிடாமல் தனது ஆளுமையை காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களையும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கினர்.Ada paavingala. Edukum #ApsaraCJ kitta doctor address vaangi vainga daw. #BiggBossTamil9#BiggBossTamilhttps://t.co/RVHYBWnuGKஇந்நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில் நடந்த சம்பவம் ஒன்றில் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, போட்டியாளர் துஷாருக்கு சக போட்டியாளர்கள் உதட்டில் முத்தம் கொடுக்கின்றனர். அதுவும் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு முத்தம் கொடுக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் இதலாம் கண்டு கொள்ளவே மாட்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் தமிழ் பிக்பாஸ் என்ன வர வர ஹிந்தி பிக்பாஸ் மாதிரி மாறிவிட்டு வருகிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகள் குறித்து நடிகர் விஜய் சேதுபதி இந்த வாரம் கேட்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
