Connect with us

பொழுதுபோக்கு

பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’… சரவெடியாக வெடித்ததா? இல்லையா? விமர்சனம்

Published

on

dude

Loading

பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’… சரவெடியாக வெடித்ததா? இல்லையா? விமர்சனம்

இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள திரைப்படம் ‘டியூட்’. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள  ‘டியூட்’ படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான ‘டியூட்’ திரைப்படம் தீபாவளி ரேஸில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். டியூட் விமர்சனம்டியூட், ஒரு நடுத்தரமான ரோம் காம் படம். முதல் பாதி ரசிக்கும்படி இருந்தாலும், இரண்டாம் பாதி மந்தமாக இருக்கிறது. வழக்கமான ரோம் காம் படங்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் படத்தில் உள்ளது. படம் ஸ்லோவாக ஸ்டார்ட் ஆனாலும் இடைவேளைக்கு முன் வேகம் எடுக்கிறது. இண்டர்வெல் காட்சியும் அருமையாக உள்ளது. இரண்டாம் பாதி நன்றாக தொடங்கினாலும் திரைக்கதை உடனடியாக படுத்துவிட்டது, அதன்பின் எழவே இல்லை. இயக்குனர் கீர்த்தீஸ்வரன் நல்ல ஆற்றலுடன் படத்தை உருவாக்கி இருந்தாலும் திரைக்கதை எதிர்பார்த்த அளவு இல்லை. குறிப்பாக இரண்டாம் பாதி மந்தமாக உள்ளது. எதிர்பார்த்தபடியே பிரதீப் ரங்கநாதனும், மமிதாவும் சிறப்பாக நடித்துள்ளார்கள். சாய் அபயங்கருக்கு ஒரு அற்புதமான அறிமுகப்படம், தேவைப்படும்போதெல்லாம் அவரின் இசை, படத்தை தூக்கி நிறுத்துகிறது. எடிட்டிங் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். படத்தில் நன்கு ஒர்க் அவுட் ஆன சில மொமண்டுகள் இருந்தாலும், எமோஷனல் கனெக்ட் இல்லை. காமெடியும் சில இடங்களில் தான் ஒர்க் அவுட் ஆகி உள்ளது என பதிவிட்டுள்ளனர்.#Dude A Mid Rom-Com with a Fairly Engaging First Half but a Lackluster Second Half!The film hits all the familiar beats of a typical rom-com. The first half starts off a bit slow but picks up well toward the pre-interval, ending with a well-executed interval block. However, the…கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டியூட்’ திரைப்படம் ரொமாண்டிக் மற்றும் காமெடி கலந்த திரைப்படமாகும். படம் மெதுவாக தொடங்கினாலும் சிறிது நேரத்திற்கு பிறகு வேகமெடுக்கிறது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பு சிறப்பு. மமிதா பைஜு எஃபெக்ட்டியூவாகவும், இயற்கையாகவும் நடித்துள்ளார். சரத்குமாரும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். சாய் அபயங்கர் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. நிகேத் பொம்மி ஒளிப்பதிவு படத்திற்கு நன்கு பொருந்துகிறது. இருந்தாலும், சீரற்ற எடிட்டிங் மற்றும் பிந்தய பாதியில் உள்ள ஆழமற்ற காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என பதிவிட்டுள்ளனர்.#Dude – PR’s Style, his combo with Mamitha Nice. Sarathkumar shines in versatile role. Hridhu Gud addition. Music ok. Slow start, Interval block 20Mins ROFL. Final act could have been better. Though less emotional connect, Humour drives d narration to an extent. ONE TIME WATCH!டியூட் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனின் ஸ்டைல், மமிதா பைஜு உடனான அவரின் காம்போ அருமையாக உள்ளது. சரத்குமாருக்கு நேர்த்தியான வேடம். அதில் அவர் மிளிர்கிறார். ஹிருது நல்ல தேர்வு. சாய் அபயங்கரின் இசை ஓகே ரகம் தான். படம் ஸ்லோவாக ஸ்டார் ஆகி, இண்டர்வெலுக்கு முந்தைய 20 நிமிடம் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு உள்ளது. கிளைமாக்ஸில் நடிப்பு இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம். எமோஷனல் கனெக்ட் கம்மியாக இருந்தாலும், காமெடியால் படம் நகர்கிறது. ஒருமுறை பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.டியூட் திரைப்படத்தின் முதல் பாதி மெதுவாக செல்கிறது. ஆனால் இண்டர்வெல் பிளாக் எதிர்பாரா ட்விஸ்ட் உடன் இருக்கிறது. இரண்டாம் பாதி சூப்பராக ஆரம்பமாகி, கிளைமாக்ஸில் ட்விஸ்டுகளுடன் நிறைவடைந்துள்ளது. மொத்தத்தில் டியூட் தீபாவளி வின்னர் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன