உலகம்
பெண் உரிமை முன்னேற்றத்தில் உறுதியாகச் செயற்படும் இலங்கை; பிரதமர் ஹரிணி தெரிவிப்பு
பெண் உரிமை முன்னேற்றத்தில் உறுதியாகச் செயற்படும் இலங்கை; பிரதமர் ஹரிணி தெரிவிப்பு
பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தை முன்னேற்றுவதில் இலங்கை உறுதியாக உள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற பெண்கள் பற்றிய உலகத் தலைவர்களின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
1995ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பெண்கள் மாநாட்டிலிருந்து இதுவரை பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதும், பெண் பணியாளர் பங்கேற்பு 48.7 சதவீதமாக மட்டுமே காணப்படுகின்றமை உட்பட பிரதானமான குறைபாடுகள் தற்போதும் உள்ளன.
அதேவேளை, பெண் கல்வியறிவு அதிகரித்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் பட்டம் பெற்றவர்களில், பெண்கள் சுமார் 35 சத வீதமாக உள்ளனர். பெண்களின் அனைத்துத் துறையிலான மேம்பாடு என்பது கல்வி, சுகாதாரம்,பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான செயன்முறை. அதற்குத் தொடர்ச்சியான அர்ப்பணிப்புத் தேவை. உலகில் எந்தவொரு நாடும் பாலின சமத்துவத்தை முழுமையாக அடையவில்லை- என்றார்.
