தொழில்நுட்பம்
ஸ்பேம் தொல்லை இனி இல்ல… வணிக நிறுவனங்கள் மெசேஜ் அனுப்ப வாட்ஸ்அப் போடும் புதிய ‘லிமிட்’!
ஸ்பேம் தொல்லை இனி இல்ல… வணிக நிறுவனங்கள் மெசேஜ் அனுப்ப வாட்ஸ்அப் போடும் புதிய ‘லிமிட்’!
உலகெங்கிலும் கோடிக்கணக்கான பயனர்களால் விரும்பப்படும் மெஜேஜ் தளமான வாட்ஸ்அப், தனது ஆஃப்-ஐ மேலும் உள்ளுணர்வுடன் பயன்படுத்தும் வகையில் புதிய அம்சங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் ‘சமூகங்கள்’ (Communities), குழுக்கள் மற்றும் பிற புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டதால், ஆஃப் சற்றுக் குழப்பமானதாகவும், விளம்பரச் செய்திகளின் குவியலாகவும் மாறிவிட்டது. வணிக நிறுவனங்கள் மற்றும் அறியாத தனிநபர்களிடமிருந்து வரும் ஸ்பேம் (Spam) செய்திகள், அறிவிப்புகளால் பயனர்கள் திணறுவதைத் தடுக்கும் விதமாக, இந்தச் சிக்கலைத் தீர்க்க மெட்டா நிறுவனம் ஒரு புதிய முறையைக் கையிலெடுக்கவுள்ளது.புதிய கட்டுப்பாட்டு முறை என்ன சொல்கிறது?மெட்டா, வாட்ஸ்அப்பில் அறியாத பயனர்களுக்கு (Unknown Recipients) வணிக நிறுவனங்கள், தனிநபர்கள் அனுப்பும் செய்திகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்த புதிய வரம்பை (Messaging Limit) சோதித்து வருகிறது. ஒரு பயனரிடமிருந்து பதில் வரும் வரை, வணிக நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் அனுப்பும் அனைத்துச் செய்திகளும் இந்த புதிய வரம்புக்குள் கணக்கிடப்படும். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஉதாரணமாக, நீங்க புதிய நபருக்குத் தொடர்ந்து 3 செய்திகளை அனுப்பினால், அந்த 3 செய்திகளும் வரம்பின் ஒருபகுதியாகக் கருதப்படும். செய்தி அனுப்பும் வரம்பை அவர்கள் நெருங்கும்போது, பயனர்களுக்குச் சாதனத்தில் எச்சரிக்கை செய்தி காண்பிக்கப்படும். அதன் பிறகு அவர்களால் மேலும் செய்திகளை அனுப்ப முடியாது.யாருக்கான கட்டுப்பாடு?டெக்ரஞ்ச் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வரும் வாரங்களில் பல நாடுகளில் இந்த லிமிட் சோதனை செய்யப்பட உள்ளது. இருப்பினும், பெரும்பாலான சாதாரண வாட்ஸ்அப் பயனர்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள். மாறாக, ஒரு நாளில் அதிகப்படியான ஸ்பேம் செய்திகளை அனுப்பும் வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்று தெரிகிறது.வாட்ஸ்அப் நிறுவனம் ஸ்பேம் செய்திகளை எதிர்த்துப் போராடுவதற்காக பல ஆண்டுகளாகப் பல்வேறு வரம்புகளைச் செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலும், வணிகங்கள் மற்றும் தனிநபர்கள் ஒரே நேரத்தில் அனுப்பக்கூடிய ஒளிபரப்பு (Broadcast) செய்திகளின் எண்ணிக்கையை விரைவில் குறைப்பதாக மெட்டா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
