இலங்கை
செவ்வந்தியை மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!
செவ்வந்தியை மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரியிருந்தனர்.
பொலிஸாரின் இந்த கோரிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
அண்மையில் நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தியிடம் பலதரப்பிலிருந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தான் அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
