இலங்கை
யாழில் அதிரடி காட்டிய பொலிஸார் ; ஒரே நாளில் 10 பேர் கைது
யாழில் அதிரடி காட்டிய பொலிஸார் ; ஒரே நாளில் 10 பேர் கைது
யாழ்ப்பாணம்-சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியின் உத்தரவுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே போதைப் பொருள்களுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து கஞ்சா, போதைமாத்திரை, மாவா உள்ளிட்ட போதைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
