வணிகம்
ஏழைகளுக்கான மைக்ரோ இன்சூரன்ஸ்: ஜிஎஸ்டி-க்கு பின் எல்.ஐ.சி.யின் 2 புதிய திட்டங்கள்- முதிர்வுப் பணத்தைத் தவணைகளில் பெறலாம்
ஏழைகளுக்கான மைக்ரோ இன்சூரன்ஸ்: ஜிஎஸ்டி-க்கு பின் எல்.ஐ.சி.யின் 2 புதிய திட்டங்கள்- முதிர்வுப் பணத்தைத் தவணைகளில் பெறலாம்
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) வெளியிட்டுள்ள இரண்டு புதிய காப்பீட்டுத் திட்டங்கள் காப்பீட்டு உலகில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. இவை, புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்குப் பிறகு எல்ஐசி அறிமுகப்படுத்தும் முதல் இரண்டு திட்டங்கள் என்பதால் முக்கியத்துவம் பெறுகின்றன! சமுதாயத்தின் இருவேறு பிரிவினரைக் குறிவைத்துத் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டங்கள், பாதுகாப்பு மற்றும் சேமிப்பை உறுதிசெய்கின்றன.குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கான ஜன சுரக்ஷா திட்டம் (880)எல்ஐசி ஜன சுரக்ஷா திட்டம் (880) என்பது குறைந்த வருமான பிரிவினருக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மைக்ரோ காப்பீட்டுத் திட்டமாகும். இது பங்குதாரர் இல்லாத, இணைக்கப்படாத சேமிப்புத் திட்டமாகும்.திட்டத்தின் சிறப்பம்சங்கள்:நோக்கம்: பாலிசிதாரரின் துரதிர்ஷ்டவசமான மரணத்தின்போது குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பையும், பாலிசி காலத்தின் முடிவில் முதிர்வுப் பலனையும் வழங்குகிறது.உறுதியளிக்கப்பட்ட தொகை: குறைந்தபட்சம் ₹1,00,000/- முதல் அதிகபட்சம் ₹2,00,000/- வரை மட்டுமே.தகுதி வயது: பாலிசியில் சேர குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 55 வயது வரை இருக்க வேண்டும்.உத்தரவாத சேர்க்கை: செலுத்தப்படும் ஆண்டு பிரீமியத்தில் 4% வீதம் பாலிசி காலம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் முடிவில் சேர்க்கப்படும்.பிற அம்சங்கள்: மூன்று முழு ஆண்டு பிரீமியத்தைச் செலுத்திய பின் தானியங்கி பாதுகாப்பு (Auto Cover) வசதி மற்றும் ஒரு முழு ஆண்டு பிரீமியத்திற்குப் பிறகு கடன் பெறும் வசதியும் உண்டு. பாலிசி காலம் 12 முதல் 20 ஆண்டுகள் வரை இருக்கும்.பெண்களுக்கான பிரத்யேக பீமா லக்ஷ்மி திட்டம் (881)எல்ஐசி பீமா லக்ஷ்மி திட்டம் (881) என்பது பெண்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு விரிவான ஆயுள் காப்பீட்டு மற்றும் சேமிப்புத் திட்டமாகும். இது ஆயுள் பாதுகாப்புடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் பணம் திரும்பப் பெறும் (Money Back) வசதியையும், முக்கிய நோய் (Critical Illness) பாதுகாப்பையும் உள்ளடக்கியுள்ளது.திட்டத்தின் சிறப்பம்சங்கள்:தகுதி வயது: பாலிசியில் சேர குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை இருக்க வேண்டும்.பாலிசி மற்றும் பிரீமியம் காலம்: பாலிசியின் மொத்தக் காலம் 25 ஆண்டுகள். பிரீமியம் செலுத்தும் காலத்தை 7 முதல் 15 ஆண்டுகள் வரை தேர்வு செய்யலாம்.உறுதியளிக்கப்பட்ட தொகை: குறைந்தபட்சம் ₹2,00,000/-. அதிகபட்ச வரம்பு இல்லை (எல்ஐசி விதிகள் மற்றும் நிதித் தகுதிக்கு உட்பட்டது).உத்தரவாத சேர்க்கை: மொத்த அட்டவணைப்படி ஆண்டு பிரீமியத்தில் 7% வீதம் ஒவ்வொரு ஆண்டும் உத்தரவாதமான சேர்க்கையாகச் சேரும்.கூடுதல் நன்மைகள்: கூடுதல் பிரீமியம் செலுத்துவதன் மூலம் பெண்களுக்கான முக்கிய நோய் ரைடர் (Female Critical Illness Rider) சேர்க்கும் வசதி உண்டு. அத்துடன், முதிர்வுப் பலன்களைத் தவணைகளில் பெறும் நெகிழ்வுத்தன்மையும் இத்திட்டத்தில் உள்ளது.இந்த இரண்டு புதிய திட்டங்கள் மூலம், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நிதிப் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் எல்ஐசி ஒரு முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளது. பாலிசிதாரர்கள் தங்களின் தேவை மற்றும் தகுதிக்கேற்ப இந்தத் திட்டங்களைத் தேர்வு செய்து பயனடையலாம்.
