பொழுதுபோக்கு
இந்திய சினிமாவை மிரட்டும் ‘காந்தாரா சாப்டர் 1’… பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் என்ன?
இந்திய சினிமாவை மிரட்டும் ‘காந்தாரா சாப்டர் 1’… பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் என்ன?
கன்னட சினிமாவில் தயாராகி இந்திய சினிமாவை அலறவிடும் அளவுக்கு வசூலை வாரி குவித்து வருகிறது ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம். இந்திய சினிமாவில் சிறிய திரையுலகமாக இருந்த கன்னட சினிமா தற்போது இந்திய அளவில் பிரம்மாண்ட வெற்றியை தரக்கூடிய அளவுக்கு பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்க தொடங்கியுள்ளனர். இந்த படங்கள், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், எதிர்பார்ப்புக்கு மிஞ்சிய படமாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில் வெளியான கே.ஜி.எஃப் 1 மற்றும் 2 படங்கள் பெரிய வசூல் வேட்டை நடத்தியது. கன்னட சினிமாவில் இன்றுவரை அதிகம் வசூல் செய்த படம் கே.ஜி.எஃப் 2 படம் தான். இந்த சாதனையை எட்டும் வகையில், தற்போது ’காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் பயணித்து வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ’காந்தாரா’ திரைப்படம் ரூ. 15 கோடியில் தயாராகி 400 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் ப்ரீக்குவல் படமாக ’காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம், அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியானபோதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ’காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் வசூலை குறித்து வருகிறது.கடந்த அக்டோபர் 2-ந் தேதி வெளியான ’காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் சுமார் 125 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உலக அளவில் ரூ. 650 கோடிக்கு மேல் வசூலை குவித்து வருகிறது. சமீபத்திய தரவுகளின்படி ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் இந்திய அளவில் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.சென்னை, மதுரை, திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சென்னையில் மட்டும் 134 காட்சிகள் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. கன்னட படங்களின் பட்டியலில் ’காந்தாரா சப்டர் 1’ திரைப்படம் 2-வது இடத்தை பிடித்துள்ளது, இந்த பட்டியலில், யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ரூ.1200 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அதேபோல் 408 கோடி வசூலித்து இந்த பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த காந்தாரா திரைப்படம் தற்போது 3-வது இடத்தை பிடித்துள்ளது.’காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தை இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் ருக்மணி, ஜெயராம் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பழங்குடின மக்களுக்கும் மன்னருக்கும் இடையிலான பிரச்சனையை விவரிக்கும் படமாக ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் வெளியானது.
