பொழுதுபோக்கு
பிக்பாஸ் சீசன் 9: இவங்கதான் எவிக்ட் செய்யப்பட்டாங்களா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிக்பாஸ் சீசன் 9: இவங்கதான் எவிக்ட் செய்யப்பட்டாங்களா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 13 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களுக்கு இடையில் கடுமையான மோதல்கள் தொடங்கியுள்ளன. முதல் வாரமே களத்தில் இறங்கிய போட்டியாளர்கள் இப்போதுதான் சற்று சண்டையை நிறுத்திக்கொண்டு சமாதானப் புறாக்களை பறக்க விட்டுக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும் பிக் பாஸ் அவர்களுக்கு அவ்வப்போது சண்டைகளை தூண்டிவிடும் விதமாக போட்டிகளை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த சீசன்களை போல அல்லாமல் பெரும்பாலும் இன்ஃபுளுவன்சர்கள் தான் இந்த சீசனில் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். போட்டியாளர்களை இரண்டு குழுக்களாக பிரித்து பிக்பாஸ் ஹவுஸ், லக்ஸுரி ஹவுஸ் என விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் லக்ஸுரி கவுஸில் இருந்த பார்வதி, பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்களை வேலை வாங்கியதால் கடுப்பான பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்கள் ஆத்திரமடைந்து பெரும் பிரச்சனை உருவானது. இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்கள் பார்வதியை டார்க்கெட் செய்து வருகின்றனர்.அதுமட்டுமல்லாமல், பிக்பாஸ் வீட்டில் டிசிப்ளின் இல்லை என்று துஷார் பதவியை பிக்பாஸ் பறித்தார். பிக்பாஸ் வைத்த பொம்மை பொம்மை பொம்மை பார் போட்டியால் ஹவுஸ் மேட்ஸ் அனைவருக்குள்ளும் சண்டைகள் வெடிக்க ஆரம்பித்தது. இதில் நாமினேஷன் ஃபிரீ பாஸ் பரிசு அதுமட்டுமன்றி கிராண்ட் டின்னர் பார்டி என்றும் அறிவித்தது. இந்நிலையில் இரு வீட்டாரும் மாறி மாறி சண்டை போட இறுதியில் லக்ஸுரி ஹவுஸ் கம்ருதீன் வெற்றிப்பெற்று எவிக்ஷன் ஃபிரீ பாஸ் பெற்றார்.இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்ற கேள்வி எழுந்து வந்தது. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் அப்சரா சி.ஜே வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் தான் அப்சரா சி.ஜே கொஞ்சம் போட்டியை புரிந்துக்கொண்டு களம் இறக்கத் தொடங்கிய நிலையில் அவரை எவிக்ட் செய்திருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.திருநங்கையான அப்சரா சி.ஜே டாஸ்கின் மூலம் தான் எதிர்கொண்ட கஷ்டங்கள், சவால்களை பகிர்ந்து கொண்டதன் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். துஷாரின் தலைவர் பதவி பறிக்கப்பட்ட பிறகு கனி பிக்பாஸ் வீட்டின் தலைவியாக இருந்து வருகிறார்.
