Connect with us

இலங்கை

21ம் திகதிக்குப் பின் அதிகரிக்கும் மழையுடனான வானிலை

Published

on

Loading

21ம் திகதிக்குப் பின் அதிகரிக்கும் மழையுடனான வானிலை

எதிர்வரும் 21 ஆம் திகதிக்குப் பின்னர் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இலங்கையின் தென்கிழக்கே அமைந்துள்ள வளிமண்டலத்தில் குறைந்த அழுத்தப் பகுதி உருவாகுவதே இந்த நிலைமைக்குக் காரணம் என்று அதன் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.

Advertisement

இது இலங்கைக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், மழை பெய்யும் நிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஸ்ட ஆய்வாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

Advertisement

அதேநேரம் நிலவும் மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகத் அந்த திணைக்களத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியாளர் எச்.எம். ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Advertisement

அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன