இந்தியா
சென்னை மக்களே.. மின்சார ரயில் சேவை குறைப்பு: ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சென்னை மக்களே.. மின்சார ரயில் சேவை குறைப்பு: ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக உள்ளது மின்சார ரயில். சென்னையில் மூன்று வழித்தடங்களில் மின்சார ரயில் போக்குவரத்து இயங்குகிறது. இந்நிலையில், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே வார நாட்களில் 200 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், பராமரிப்பு காரணமாக, வரும் திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, திங்கட்கிழமை முதல் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே 125 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன. மேலும், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வழித்தடத்தில் 20 நிமிட இடைவேளைக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதே போன்று, செங்கல்பட்டில் இருந்து கடற்கரை வழித்தடத்தில் 30 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை இருக்கும் என தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.
மின்சார ரயில் சேவை குறைப்பால், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதால், பொதுமக்கள் அதற்கு ஏற்ப தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.