இலங்கை
வாகன இறக்குமதியால் பல பில்லியன் வருமானம் ஈட்ட இலக்கு
வாகன இறக்குமதியால் பல பில்லியன் வருமானம் ஈட்ட இலக்கு
அரசாங்கம் அடுத்த வருடம் வாகன இறக்குமதி மூலம் தமது வருமானத்தை 550 பில்லியன் ரூபாயாக அதிகரிக்க எதிர்பார்ப்பதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, வாகன இறக்குமதி மூலம் இந்த வருடம் 650 பில்லியன் ரூபாய் வருமானத்தை எட்டுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இதுவரை வாகன இறக்குமதி மூலம் 450 பில்லியன் ரூபாய் வருமானத்தை அரசாங்கம் பெற்றுள்ளதாக குறித்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், அடுத்த வருடத்துக்கான பாதீடு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளமையால் தற்போதுள்ள வரிகள் திருத்தப்பட வாய்ப்பில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் கோரிக்கை அடுத்த வருட பாதீட்டில் பரிசீலிக்கப்படாது எனவும் குறித்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
