இலங்கை
இறால் பண்ணையில் இளைஞர் ஒருவர் பலி ; விசாரணையில் வெளியான தகவல்
இறால் பண்ணையில் இளைஞர் ஒருவர் பலி ; விசாரணையில் வெளியான தகவல்
வவுனியா முந்தல் பொலிஸ் பிரிவின் பத்துலுஓயா பகுதியில் இறால் பண்ணை ஒன்றின் தண்ணீர் தொட்டியில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் வவுனியாவைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் வலிப்பு நோயால் தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
