Connect with us

சினிமா

Balloon அக்காவையும் mellon அண்ணாவையும் பார்க்காதீங்க… ஹரிஷ் கல்யாண் பற்றி ப்ளு சட்டை

Published

on

Loading

Balloon அக்காவையும் mellon அண்ணாவையும் பார்க்காதீங்க… ஹரிஷ் கல்யாண் பற்றி ப்ளு சட்டை

அறிமுக இயக்குனர் ஷண்முக முத்துசாமி இயக்கத்தில்  ஹரிஷ் கல்யாண்,  ரவி நடிப்பில் வெளியான படம் டீசல். இந்த படம் கடந்த 17ஆம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. டீசல் படத்திற்கு குறைந்த அளவினால் காட்சிகளே தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன.  ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் தமது பாராட்டை  தொடர்ச்சியாக கொடுத்து வருகின்றனர்.  இதனால் நாளுக்கு நாள்  படத்தின் காட்சிகள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் முதல் இரண்டு நாட்களில் 50 லட்சங்களை வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.  மேலும் எதிர்வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் படக் குழு உள்ளது. டீசல் பட ப்ரோமோஷனில், தீபாவளிக்கு டீசல் படம் ரிலீஸ் ஆக என்ன தகுதி உள்ளது என்று தயாரிப்பாளரிடம் ஒருவர் கேட்டதாக கூறி ஹரிஷ் கல்யாண் வருத்தப்பட்டார். அதற்கு நல்ல கதையும்,  நல்ல டீமும்  இருந்தால் யார் படம் வேண்டுமானாலும் தீபாவளிக்கு வரலாம் என்று  பதிலடி கொடுத்து இருந்தார். இந்த நிலையில்,  ரசிகர்களுடன் டீசல் படம் பார்க்க வந்த ஹரிஷ் கல்யாணை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் அங்கிருந்த கூல் சுரேஷ்  அவரைப் பற்றி பேசிய கருத்துக்களை விமர்சித்து, ப்ளூ சட்டை மாறன் ஹரிஷ் கல்யாணுக்கு அட்வைஸ் பண்ணி உள்ளார். அதாவது கூல் சுரேஷ் பேசும்போது, பிக் பாஸில் பலூன் அக்காவையும்,  வாட்டர் மெலனையும் பார்க்காமல் டீசல் படத்திற்கு வந்து அதுல்யா ரவியை பாருங்கள். எனது தம்பி ஹரிஷ் கல்யாணை  பாருங்கள். நான் பிக் பாஸில் கலந்து கொண்ட போது ஹரிஷ் கல்யாண் எனக்கு 2500 மதிப்புள்ள டீசெர்ட் ஒன்றை கொடுத்தார்.  அவர் அன்பான மனிதர்.  இயக்குனர் சண்முகம் இதுபோன்ற சமூக அக்கறை உடைய படத்தை தொடர்ச்சியாக எடுக்க வேண்டும் என்றார்.இதை தனது  ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், இதையெல்லாம் ஒரு ப்ரமோஷன் என ஹரீஷ் கல்யாண் நினைத்தால்.‌‌. வளர்ந்து வரும் நேரத்தில்.. தன்னைத் தானே பின்னோக்கி நகர்த்துகிறார் என்று அர்த்தம்… என்று பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன