இலங்கை
வவுனியாவில் பெருமளவு போதை மாத்திரைகளுடன் 23 வயது இளைஞன் கைது!
வவுனியாவில் பெருமளவு போதை மாத்திரைகளுடன் 23 வயது இளைஞன் கைது!
வவுனியா பொலிஸார் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உலர்ந்த மீன்களுக்குள் மறைத்து அனுப்பப்பட்டிருந்த பெருமளவு போதை மாத்திரைகளை கைப்பற்றி, 23 வயதான இளைஞரை கைது செய்துள்ளனர்.
பொலிஸார் தெரிவித்ததாவது, வவுனியா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 359,000 (முந்நூற்று ஐம்பத்தொன்பதாயிரம்) போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்பிட்டியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
