பொழுதுபோக்கு
கருப்பு சாமியா மாறிய சூர்யா; ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்: கருப்பு முதல் பாடல் எப்படி இருக்கு?
கருப்பு சாமியா மாறிய சூர்யா; ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்: கருப்பு முதல் பாடல் எப்படி இருக்கு?
ரெட்ரோ படத்திற்கு பிறகு சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், கருப்பு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கு சூர்யா ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில், இந்த படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.சமீபத்தில் வெளியான ‘ரெட்ரோ’ (Retro) திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, நடிகர் சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வரவுள்ளார். தற்காலிகமாக சூர்யா 45 என்று பெயரிடப்பட்ட இந்த படத்தின், பெயர் கருப்பு என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே, படத்தின் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்காத நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் முதல் சிங்கிளான “காட் மோட்” (God Mode) பாடலை வெளியிட்டனர்.4 நிமிடங்கள் ஓடும் இந்தப் பாடல், சூர்யாவின் கதாபாத்திரத்தை முழுவதுமாக “காட் மோட்”-இல் (கடவுள் ரூபத்தில்) காட்சிப்படுத்துகிறது. இவரின் வருகை ரசிகர்களை பெரும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் நாட்டுப்புறத் தெய்வங்களில் மிக சக்தி வாய்ந்த மற்றும் பரவலாக வழிபடப்படும் காவல் தெய்வமான கருப்பசாமியின் மனித உருவமாக சூர்யாவின் கதாபாத்திரம் இந்தப் பாடலில் காட்டப்பட்டுள்ளது. இவரது பார்வையில் தவறுகள் செய்பவர்களுக்கு இடமில்லை என்பதைப் பாடல் வலியுறுத்துகிறது.பாடலின் பல்லவியில், சூர்யா கருப்பசாமி என்று குறிப்பிடப்படுகிறார். இவரின் வருகை பூமிக்குச் சிரிப்பையும், மக்களின் இதயங்களில் அமைதியையும் கொண்டு வரும் என வர்ணிக்கப்படுகிறது. சூர்யாவின் இந்தச் சமீபத்திய பாடலைக் கேட்டு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு ரசிகர், “உலக சூர்யா சார் ரசிகர்கள் கூடுங்கள்..” என்று பதிவிட்டிருந்தார். மற்றொரு கருத்து, “சாய் (Sai) இப்போது அன்ஸ்டாப்பபுல் என்று குறிப்பிட்டதுடன், இன்னும் ஒருவர் “காட் மோட் உச்சம்” என்று பாராட்டினார்.முன்னதாக கடந்த ஜூன் மாதமே, சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்தின் டீசர் வெளியானது. டீசர் சூர்யா கருப்பு சட்டை, வேஷ்டியில் பவர் பேக் செய்யப்பட்ட தோற்றத்தில் ஆரம்பித்து, பின்னர் அவர் வழக்கறிஞர் கோட் அணிந்திருக்கும் காட்சிக்கு மாறுகிறது. ‘ஜெய் பீம்’ மற்றும் ‘எதற்கும் துணிந்தவன்’ படங்களுக்குப் பிறகு, சூர்யா வழக்கறிஞராக நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இதுவாகும்.டீசரில், ‘கஜினி’ திரைப்படத்தின் புகழ்பெற்ற தர்பூசணி காட்சி மீண்டும் ரீகிரியேட் செய்யப்பட்டிருந்தது.:ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில், சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவதா, சுப்ரீத் ரெட்டி, மற்றும் அனகா மாயா ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
