இலங்கை
செவ்வந்திக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
செவ்வந்திக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
திட்டமிட்ட குற்றவாளி எனக் கூறப்படும் ‘மத்துகம ஷான்’ என்பவரின் நெருங்கிய நண்பர் மற்றும் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தியை, 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியது.
இதனைத் தொடர்ந்து அவர் கொழும்பு குற்றப்பிரிவால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
